Thursday, 30 July 2015

சகலமும் வசியமாக பழங்கால முறை

வியாபார வெற்றிக்கு புருவ திலகம்


ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி அன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் மை கட்டும். அந்த மை எடுத்து அத்துடன் ஜவ்வாது,பட்சை கற்பூரம்,புனுகு,கோரோசனை சேர்த்து குழைத்து வெள்ளி டப்பியில் வைத்து தொழில் வியாபாரம் செய்ய, மற்றும் எங்கு செல்வதானாலும் மையை புருவத்தில் வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும்.

ரகசியமாய் வைக்கபட்டுள்ள ஜன வசியம்


'சகல சித்தி வசிய திலகம்'


தொடர்ந்து பலர் மேற்கண்ட திலகம் (மை) பற்றி தேவை என கேட்டு கொண்டே இருப்பதால் முதலில் ஒரு 50 நபர்களுக்கு வரும் படி மேற்கண்ட மை தயார் செய்யப்படுகிறது.19.5.14 திங்கள் முதல் இதற்கான விருப்பம் மற்றும் கட்டணம் செலுத்துபவர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையில் கொடுக்கப்படும். கட்டணம் செலுத்தும் அனைவரும் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
(1) தங்களின் பிறந்த தேதி,முழு பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர்-நான்கும் தேவை
(2) மேற்கண்ட மை சிறிய அளவே இருக்கும்-உதாரணமாக சாதாரண ஐடெக்ஸ் மை டப்பாவில் பாதி அல்லது 40% இருக்கும்.
(3) தினசரி உபயோகிக்காமல் அவசிய தேவைகளுக்கு உபயோகித்தல் பல விதங்களில் பலனும், பயனும் தரும்
(4) மேற்கண்ட திலகத்தை தவறான செய்கைகளுக்கு பயன்படுத்த கண்டிப்பாக மிக மோசமான பின் விளைவுகள் வரும்.
(5) கணவன் மனைவி பரஸ்பர தேவைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.
(6) சாதாரண திலகம் போல் எப்போதும் நெற்றியில் வைத்திருக்க கூடாது. தேவை படும் போது மட்டும் உபயோகிக்கவும். முக்கியமாக கணவன் மனைவி உறவுகளுக்கு அல்லாமல் வேறு தன, தொழில்,கடன் அல்லது வேறு விஷயங்களுக்கு உபயோகிப்பவர்கள் கண்டிப்பாக வீடு சென்றவுடன் அழித்து விட வேண்டும். இரவில் அணிய கூடாது.
(7) எல்லாவற்றிற்கும் மேலாக, மிக மிக அதீத நம்பிக்கை உடையவர்கள் மட்டும் முயற்சி செய்யவும். பரிசோதனை, எதிர் மறை எண்ணமுள்ளவர்கள் தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதீர்கள். எதிர் மறை எண்ணமுள்ளவர்களை கடவுளாலும் காப்பாற்றுவது கடினம் என்பது என் கருத்து.
(8) இதில் கொடுக்கப்பட்டதற்கு மேல் வேறு எந்த விவரங்களும் இல்லை. மேற்கண்டவற்றை நன்றாக படித்து புரிந்து கொள்ளவும்.பலன்கள் நபருக்கு நபர் மாறுபடும்.வைத்தவுடன் வாழ்க்கையே தலை கீழாக மாற்றி போட இது விட்டலாச்சாரியர் படம் இல்லை. அகத்தியர் மற்றும் கோரக்க முனிவர் கூறியபடியான முறைகளை மிக கடுமையான அனுஷ்டானங்களை கையாண்டு தான் தயாரிக்கப்படுகிறது.

தன ஜன வசீகரம் செய்யும் "ஹத ஜோரி"


ஹத ஜோரி மற்றும் ஹத ஜோடி என அழைக்கப்படும் மூலிகையானது மிகவும் அபூர்வமான ஒன்று மட்டுமல்ல-காண்பதற்கு அரிதும் கூட.இதன் மொத்த உயரமே 1-2 இன்சு மட்டுமே. மத்திய பிரதேச மாநிலம் மற்றும் நேபால் பள்ளத்தாக்குகளில் விளையும் இது-தாந்த்ரீகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். பண மற்றும் ஜன வசியத்திர்க்கு பிரசத்தி பெற்ற ஒன்றும் கூட. இந்த செடியின் பெயர் "பிர்வா" என அழைக்கப்படுகிறது. மிக அதிகமான எம் தேடுதலுக்கு பிறகு யாம் தெரிந்து கொண்ட விஷயம்-தமிழில் இதற்கு "புலி நகம்" மற்றும் "காக்கா மூக்கு செடி","தேள் கொடுக்கி" என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதன்
வேரானது மனித கைகள் இரண்டும் கை கூப்புவது போல் இருப்பதால் இதற்கு ஹிந்தியில் மற்றும் தாந்த்ரீகத்தில் "ஹத ஜோடி" என அழைக்கப்பட்டு வந்தது.தாந்த்ரீகத்தில் - இதை உடன் வைத்திருந்தாலே நடக்க முடியாத காரியம் என்று எண்ணி இருந்ததெல்லாம் நடந்து முடியும் என கூறப்படுகிறது. மேலும் எவ்விதமான பயத்தையும் போக்கி மனிதனில் வசீகர சக்தியை ஏற்படுத்தும் இது.
தாந்த்ரீகத்தில் இதன் பெருமைகளாக : பயத்தை போக்கும், பணத்தை வசீகரிக்கும், மனிதர்களை வசீகரிக்கும், விபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் மற்றும் இதை வைத்திருப்போரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மாவட்டங்களின் குக்கிராமங்கள் மற்றும் தாந்த்ரீகத்திற்கு பெயர் பெற்ற சட்டீஸ்கார் மாநிலம் போன்றவற்றில் இது மிக பிரபலம். சாமுண்டீஸ்வரியின் தோற்றமாக இது கூறப்படுகிறது. பல காலமாக உண்மையான "ஹத ஜோடி" யை தேடி வந்தோம்.சமீபத்தில் கிடைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சி. தெய்வீகமான இதை முறையாக உபயோகிப்பவருக்காக 11 எடுத்து வைத்தோம். தற்போது 6 மட்டுமே உள்ளது. தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். கருத்து பெட்டியில் விலை கேட்க வேண்டாம் மற்றும் இதை வியாபார பொருளாக பார்க்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். கஷ்டத்தில் உள்ளோர் பயன் பெறட்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த பதிவு இடப்படுகிறது. இதன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. 


http://mantraayantraa.blogspot.in/


சப்த ஆகர்ஷன சக்தியை பெறும் பயிற்சி முறை



நாடு விட்டு நாடு, கண்டங்களை தாண்டியும் பிறர் பேசுவதை, நினைப்பதை அறியும் முறையே சப்த ஆகர்ஷன முறை எனலாம். எனக்கு தெரிந்த ஒருவர் வெறும் கைகளை பிடித்து கொண்டே நாம் முதல் நாள் உண்ட உணவுகளை முதற் கொண்டு கூறுவார் !! தற்சமயம் நினைப்பதை கூட கூறிவிடுவார் !! இது போன்று சிலருக்கு பிறவியிலேயே தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வது போன்ற திறன் இருக்கும்.கர்ண யட்சினி,வாக்குவாலை உபாசகர்களுக்கு இது எளிதில் சித்தியாகும். சப்தாகர்ஷய மந்திரம் ஜெபிப்போர்க்கும் இது கைகூடி வரும்.நான் இவற்றை பயிற்சியின் மூலமே பெற்றேன். இங்கு கொடுக்கவிருப்பது வேறு ஒரு எளிய பயிற்சி முறை. சரியாக கடைபிடித்தால் கண்டிப்பாக சித்தியாகும். பல நன்மைகளை பெற முடியும். மேலும் இதை நல் வழிக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். சிறிய விசயங்களுக்கு உபயோகப்படுத்துவது, மற்றும் தன்னால் எதுவும் அறிந்து கொள்ள முடியும் என பிறருக்கு தெரிவிப்பதற்காக பகட்டு செய்வது போன்றவை இருப்பின், சக்தி இழப்பு ஏற்படும். இதை பலரிடம் நான் கண் கூடாக கண்ட ஒன்று. கவனம் தேவை. 












Wednesday, 1 October 2014

அஷ்ட கர்மங்களில் 'மோஹனம்' அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. மோஹனத்தில் பல முறைகள் உள்ளன. அவற்றில் மிக எளிய முறையான சிலவற்றை கொடுத்துள்ளேன். அனைத்தும் முன்னோர்கள், மஹரிஷிகள், சித்தர்கள் அருளியவை. சக்திவாய்ந்தவை. பரிசோதிக்கப்பட்டவை. இதன் உபயோகம் நல் வழிக்காக இருந்தால் மட்டுமே பலன் தரும்.தகாத மற்றும் விருப்பமில்லாத ஆண் /பெண் மோஹம், அடுத்தவர் சொத்தை அபகரிக்க போன்ற தீய விஷயங்களுக்கு உட்படுத்த முயற்சித்தால் மிக கடுமையான எதிர் விளைவுகள். கவனம் தேவை.














எலுமிச்சையில் மாந்திரீகம்

http://mantraayantraa.blogspot.in/



இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம் கலந்த உடைகள் அணியலாம்.காமாட்சி விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி ஒரு மர ஸ்டூலில் அல்லது மனையில் கிழக்கு முகமாக வைக்கவும். விளக்கில் இருந்து நாலடி தள்ளி தர்ப்பை புல் பாய் விரித்து அதில் மேற்கு பார்த்தவாறு அமராவும். வலது கையில் எலுமிச்சை கனியை வைத்து கொண்டு (கனியை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்-கனியில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்) தீப ஒளியை பார்த்தவாறே அகத்தியர் மந்திரமான " ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய தேசிப்பழம் ஆகர்ஷய வாவா ஸ்வாகா" என 108 முறை ஜெபம் செய்து கனியை விளக்கின் பாதத்தில் வைக்கவும். மீண்டும் விரிப்பில் அமர்ந்து இடது கையை விரித்து அதில் வலது கையை வைத்து கண்களை மூடி புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்தி அதே மந்திரத்தை முடிந்த வரை தியானிக்கவும்.சுமார் 15 நிமிடங்கள் அவ்வாறு செய்து முடித்ததும் எழுந்து விடலாம். அதே கனியை வைத்து கொண்டு தினசரி கூறியுள்ள நேரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வர மந்திர சித்தி உண்டாகி விடும். 90 நாட்களுக்குள் விளக்கு பாதத்தில் வைத்த பழம் நகர்ந்து நம்மிடம் வந்து சேரும். இது 45 நாட்களிலேயே கை கூடி விட்டால் கூட மேற்கண்ட பயிற்சியை நிறுத்தி கனியை வைத்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்த மந்திர பயிற்சியில் கனி வாடி கனத்து போகுமே அன்றி அழுகி விடாது. கையில் வந்து சேர்ந்த கனியை அடுத்த 60 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஒரு முறை மந்திரம் சித்தி ஆகிவிட்டால் பின்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்து செய்தால் கனி கைகளில் சேர்ந்து விடும். மிக உபயோகமான சக்தி வாய்ந்த முறை இது. பயிற்சி நாட்களில் மது,மாது,மாமிசம்,புகை போன்றவை அறவே கூடாது. பொதுவாக இந்த மந்திரம் 1.25 லட்சம் முறைகள் உருவேற்றி விட்டால் மந்திரம் நம்முடனே இருந்து தேவையான சமயத்தில் யாருக்காக வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சுபம் உண்டாகும். 

நினைத்தது நடக்க

மிருகஷீச நட்சத்திரத்தில் புளிய மர புல்லுருவிக்கு காப்பு கட்டி எடுத்து கையில் கட்டி கொள்ள போட்டி,பந்தயம்,ரேஸ்,லாட்டரி  இவற்றில் வெற்றி கிடைக்கும்.







வட மாநிலங்கள் மற்றும் ஆந்திராவில் மிக பிரபலமான 'குபேர சாவி' யானது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய ஒன்றாகும். இதை வியாபாரம் மற்றும் வீடுகளில் பூஜை அறை அல்லது பணப்பெட்டியில் வைத்திருக்க எதிர்பாராத பண வரவு இருந்து கொண்டு இருக்கும். தற்போது இது நம் "ருத்ர பரிஹார் ரக்‌ஷா ஸென்டர்' ல் குறைந்த அளவு வந்துள்ளது.சிறியது ரூ.600/-. தேவைக்கு +919840130156
http://mantraayantraa.blogspot.in/

வலம்புரி சங்கின் மகிமைகள்







பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும். இதை பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறேன். சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க என்னால் முடியும். நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும். சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தவாரே முடி போடுதல் தான் முடிக்கயிறு. இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து,வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம். தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும். சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட  கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும்,வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன. 

ஓம் கங் கணபதையே நமஹ !! 

http://mantraayantraa.blogspot.in/

http://mantraayantraa.blogspot.in/

http://mantraayantraa.blogspot.in/

http://mantraayantraa.blogspot.in/

மந்திரங்களின் மூலமும் வேறு சில கைங்கரியங்களின் மூலமும் அனைத்து உயிர்களும் அமைதியோடும், இன்பமாகவும் வாழ வழி செய்வதே இந்த வலைப்பூவின் நோக்கம். மேலும் நம் முன்னோர்கள் அருளி சென்ற பல்வேறு அதீத சக்தி வாய்ந்த மந்திரங்கள் மற்றும் மாந்திரீக முறைகளையும் அனைவருக்கும் அறிய வைக்க செய்யும் சிறு முயற்சியும் ஆகும். நம் நாட்டின் மாந்திரீகம் மட்டுமில்லாமல் அரபி,சீனா மற்றும் திபெத்திய, கிரேக்க வழி முறைகளும் விளக்கப்படும்.முயற்சியுடைவார்கள் மற்றும் அதீத நம்பிக்கையுடன் தொடர்ந்து கடை பிடிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும் !!! வாழ்க வளமுடன் !! 

8 comments:

  1. மிக அற்புதம்.தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக அற்புதம்.தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. புலிநகம் வேண்டும்

    ReplyDelete
  4. எனது அன்பணவரை மீண்டும் என்னுடன் சேர்க்க

    ReplyDelete
  5. Aiya macha kal eanga kidikum

    ReplyDelete