செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்- பாகம் 2
செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்-பாகம் 1
நம் வேந்தர் தொலைகாட்சி பேட்டியை அடுத்து நேரில் ஆலோசனைக்கு வந்தவர்களில் 90 சதவீதத்தினர் மேற்கண்ட செய்வினை ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அல்லது பாதிகப்பட்டதாக மன ரீதியான பயத்தால் வந்தவர்களே. இதை பற்றிய பல கால ஆய்வுகளுக்கு பின் இவற்றை அறிவியல் ரீதியாகவும் நிச்சயமாக நிரூபிக்கமுடியும் என்பதே எம் கருத்து. அப்படி முடிகிற விடயங்கள் மட்டுமே போலிகளை உடைத்து உண்மைகளை மட்டும் நிறுத்தி நீண்ட காலங்கள் நிலைத்து நிற்கும். சில ஜோதிட நண்பர்கள் இவைகளை ஜாதக ரீதியாக கால நேரத்திற்கு உட்பட்டால் மட்டுமே செய்வினை செய்ய முடியும் என கூறி வருவதுண்டு. எம் அனுபவத்தில் அப்படி இல்லாமலும் அதாவது கால நேரத்திற்கு அப்பாற்பட்டும் இவைகளுக்கு ஆட்பட்டு துன்பபடுவோர் பலர் இருப்பதை அனுபவ ரீதியாக பார்த்து வருகிறோம். இதில் மன ரீதியாக சில ஆன்மீக நபர்களால் தவறாக கூறப்பட்டு பயத்தில் பல காலங்கள் மன ரீதியாக துன்பப்பட்டு வருபர்களும் அதிகம். விஷ போஜனம் என கூறப்படும் இடுமருந்து கொடுத்து செய்வினையால் ஆட்படுபவர்களுக்கு சிலர் சில பச்சிலை மருந்து கொடுத்து வாந்தி எடுக்க செய்து பின்பு செய்வினை விலகி விட்டது என கூறி அனுப்பிவிடுகின்றனர். மன ரீதியாக துன்பத்தில் இருப்போருக்கு மட்டுமே இது நன்மை செய்யும். உண்மையில் கடுமையான இடு மருந்து பாதிப்பில் உள்ளோருக்கு இவை வேலை செய்யாது. பல வருடங்கள் உள்ளே ஊறிய விஷத்தை, உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவிய ஒன்றை ஓரிரு நாட்களில் அல்லது சில மாதங்களில் எடுத்து விட முடியாது.இருந்தும் எம்மிடம் வருவோர் பலருக்கு உடனடி நிவாரணம் கிடைத்து வருவதற்கு காரணம், இவர்களுக்கு எதிரிகளால் கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியமின்மை மட்டுமே. இது போன்ற பாதிப்புகளை நம் மகரிஷிகள் மற்றும் சித்தர்கள் பல காலம் முன்பே பல் வேறு வகைளில் பிரித்து நமக்கு அருளி சென்றுள்ளனர். நல்ல வேலையாக அதில் பல மூலிகைகள் தற்சமயம் கிடைப்பதில்லை. ஆகையால் அவ்வளவு வீரியமான
மருந்தும் பல காலம் தங்கி அழிக்கும் செய்வினை செய்யும் மாந்த்ரீக நபர்கள் தற்காலத்தில் வெகு குறைவு. இவற்றில் மூலிகைகளின் மூலம் கொடுப்பது, யட்சிணி மற்றும் குட்டி சாத்தன் மூலம் செய்யும் கேரளா முறைகள், அரேபிய முறைகள் என பல் வேறு வகைகள் உள்ளன. அடுத்த பாகம் மேலும் பல தகவல்களையும் இதை பற்றிய நல்ல தெளிவான பார்வையையும் உங்களுக்கு கொடுக்கும். முடிக்குமுன் ஒரு பரிகார முறை..
பில்லி நீங்க : காட்டு சீரக இலைகளை சாறெடுத்து பாதிக்கப்பட்டவரின் உடல் முழுதும் தடவ வெகு சில நாட்களில் பாதிகப்பட்டவரின் உடல் எரிச்சல், கண் வீக்கம், சொறி சிரங்கு மற்றும் வேறு உபாதைகள் குணமாகி நலம் பெறுவர்.
மற்றவை அடுத்த பாகத்தில்..

No comments:
Post a Comment