Thursday, 30 July 2015

மாந்திரீக பயிற்சி

மாந்திரீக பயிற்சி
மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் -1 :



மாந்திரீக பாடம் -1

1, மஹா கணபதி  தியானம் 

2, தெட்சணாமூர்த்தி  தியானம் 

3, சகல மந்திர சாபநிவர்த்தி 

4, பிரணாப் பிரதிஷ்டா மந்திரம் 

5, சகல யந்திரங்களுக்கும் மந்திரம் 

6, மந்திர காயத்திரி  

7, யந்திர காயத்திரி

8, சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

9, பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

10,சகல தேவதா வசிய மந்திரம்                                                                                                                                                 ஆக 10 வித மந்திரங்களை கீழே காண்போம் 

1. மகா கணபதி தியானம் 

ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக 

றீங் கணபதி வருக றீங்கார கணபதி வருக 

ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக 

கங் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள் 

வசி -வசி -வயநம சிவாயநம -ஒம்-றீயும்

ஸ்ரீயும் -அவ்வும் சவ்வம் -கங் கனாய கனாய வருக சுவாஹா 


2) தெஷிணாமூர்த்தி தியானம் 

ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம் 

சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய 

( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி  

ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .

4) பிராண பிரதிஷ்டை மந்திரம் 

ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா   அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம் 

 1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா 

3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

4) ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

6) மந்திர காயத்ரி .

மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத் 

7) யந்திர காயத்ரி 

யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .

8) சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .

9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10)  சகல தேவதா வசிய மந்திரம் 

மீறியும் கிரியும் சிரியும் வசி வசி

இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன்  தரும் .
மாந்திரீக பயிற்சி முதல் நிலை-பாடம் 2


மாந்திரீக பாடம் 2

மாந்திரீகத்திற்கு என்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளது. மாந்திரீகத்தில் மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று அடிப்படையைச் சார்ந்ததாக உள்ளது. மந்திரம் என்பதை மந்திரம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம். இந்திய மாந்திரீகத்தில் பில்லி, சூனியம், ஏவல், மறைப்பு, வைப்பு மற்றும் அஸ்டகர்மங்கள் கூடிய அங்கமாக உள்ளது. தற்கால அறிவியல் இவற்றை மூடத்தனம் என்று கூறினாலும் உலகால் அறியப்படாத பல விசயங்களை அறிவியல் கண்பிடிக்க முடியாமல் இருக்கிறது.

இன்று அறிவியலாக இருப்பது நாளை அறிவியலாக இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. உண்மையில் ஆன்மீகமும், அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது. இத்தகைய மாந்திரீகத்திற்கு என்று தனிக்கோட்பாடுகள் உள்ளது. இத்தகைய கோட்பாடுகளை இங்கு பார்ப்போம்.

மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும். இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது. உடலில் இயங்குதசை, இயக்குதசை, இயங்காதசை, இயங்கிஇயக்குதசை என்று நான்கு வகையுண்டு. இந்த நான்கையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடியும்.

இயங்குதசை:-

இருதயம் ஒரு இயங்குதசையாகும். அது எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும். அதன் வேகத்தை இயற்கைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது தியானமாகும்.

இயங்குதசை:-

கை, கால், கண், வாய் ஆகியவைகள் இயக்குதசையாகும். இவைகள் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவை. கால்களை ஆசனங்கள் மூலம் ஒருமைப்படுத்துவதும், கைகளை முத்திரைகள் மூலம் ஒருமைப்படுத்துவதும் வேண்டும்.

இயங்கி இயக்கு தசை:-

நம் உடம்பில் உள்ள சில தசைகள் இயங்கவும் செய்யும், நம் இயக்கத்திற்கும் கட்டுப்படும். உதாரணமாக நம் மூளையை சொல்லலாம்.
பொதுவாக ஒரு மனிதன் தன் முயற்சியால் ஒரு நிலத்தை தோண்டி அதில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைப்பதற்கு அவனுடைய சக்தியோ, அல்லது அறிவியல் சக்தியோ உபயோகப்படாது. அதற்கு ஒரு மறைமுக பிரபஞ்ச சக்தி தேவை. அந்த மறைமுக உயர் பிரபஞ்ச சக்தியை தான் கடவுள் என்கிறோம். கடவுளின் தன்மையை முப்பரிமாணத்தில் காணப்படுகிறது. கடவுள் உருவாக்குகிறார், நடத்துகிறார். முடிவிற்கு கொண்டு வருகிறார். இம்மூன்றும் கடவுளின் வேலையாக கூறப்படுகிறது. இம்மூன்று தொழிலைச் சார்ந்து மனிதனின் வேண்டுதல் அமைகிறது. அந்த வேண்டுதல் நன்மையைக் கொடுப்பதாகவும், தீமையை உருவாக்குவதாகவும் அமையலாம்.

மாந்திரீக தாந்திரியங்கள்:-

தாந்திரியங்கள் என்ற உடன் இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கைபிரட்டு வேலை அடுத்தது தாந்திரிக வழிபாட்டு மூலம் தெய்வங்களை தன் வழிக்கு கொண்டு வந்து செயல்படுத்த வைக்கும் விதமாகும்.

தந்திர கைபிரட்டு வேலை:-

ஒரு மந்திரவாதி தன்னை நம்புவதற்காக அவர்கள் செய்யும் தந்திர ஜாலங்கள் ஆகும். இவை தனது கூறிய அறிவின் மூலமாக அடுத்தவர்களை ஏமாற்றும் ஜாலமாகும். வாயில் லிங்கம் வரவழைப்பதில் இருந்து ரோட்டில் வித்தை காட்டும் தந்திரவாதி செய்யும் பல காரியங்கள் இந்த கைபிரட்டைச் சார்ந்ததாக அமைகிறது. சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் இத்தகைய கைபிரட்டுகள் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உதாரணமாக ஒருவர் மந்திரவாதி கொடுத்த பழத்தை உரித்த பொழுது அந்த பழம் துண்டுதுண்டாக பிரிந்து விழுந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை உருவாக்க அந்த மந்திரவாதி அந்த முழு பழத்தை முன்னாலே ஒரு ஊசியைப் பழத்தில் குத்தி அந்த பழத்தை முழுசாக வைத்தே அறுத்துவிட்டார். இதேபோன்று பல வித்தைகள் உண்டு. திருநீர் வரவழைப்பது, வாயிலிருந்து இரத்தம் கக்க வைப்பது, கையில் பூ வரவழைப்பது போன்றவையாகும்.

தந்திரயோகம்:-

தந்திர யோகத்தின் மூலம் தெய்வீக சக்தியை எளிதில் அடைவதற்கு உரிய தந்திரமுறைகள் ஆகும். சிவ அம்சத்தில் திரு மந்திரம் என்ற தமிழ் நூலில் பஞ்ச அச்சரங்களைக் கொண்டு எவ்வாறு ஆன்மீக சக்தியைப் பெறலாம் என்று 24வகை தந்திர முறைகள் உள்ளன. மகாமேரு உபாசனையும் ஒரு தந்திர முறையாகும். குலத்தந்திரம், ஊதாபுத்தர் தந்திரம் போன்ற பல தந்திர முறைகள் உள்ளன. இவைகளில் சிறந்தது சிவ அச்சர தந்திரமும், மகாமேரு தந்திரமும் ஆகும். சிவ அச்சர தந்திரமாகிய சிவாயநம என்ற ஐந்து அச்சரங்களும் நமது உடலில் உள்ள ஐந்து விதமான சக்தியின் கேந்திரமாகும்.

கடவுள்உருவாக்குகிறார்:-

மனிதன் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அதே நேரத்தில் அதிகம் குழந்தை உள்ளவனோ தனக்கு குழந்தை தேவை இல்லை என்று எண்ணுகின்றான்.

கடவுள்வழிநடத்துகிறார்:-

கடவுள் வழி நடத்துவது தனக்கு பொருளாதாரத்தில் சிறப்பான வழி நடத்தல் தேவை என்று நினைக்கின்றான். வேறு சிலரோ அமைதியான மன நிறைவான வாழ்க்கை தேவை என்று நினைக்கின்றான்.

முடிவிற்கு கொண்டு வருகிறவர்:-

பல நல்ல காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. அதே நேரத்தில் தீய காரியங்கள் தீமையாக முடிவிற்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களும் உண்டு.

அறியாமை, இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.

இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன. ஒன்று ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும். ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் செய்வது ஒரு வகையாகும். தான் விரும்பியப் பெண்ணை அடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும். பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச்சார்ந்தேஇருக்கும்.

எங்கள் இடம் மாந்திரீக யந்திரம் மை வசிய தாயத்து கிடைக்கும்

பெண் வசியம் செய்யும் மூலிகை
பெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி



தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போது  அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம்போல நம்முள் பாயும். நாற் பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டி ரால், பினிடால், நார்எபிநெப் ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. வி
தைகள் மியூசிலே ஜ் கொ ண்டவை. இதில் குளுக் கோனிக் அமிலம் ஆகியவை காணப்படு கின்றன.

மாந்தீரிக மூலிகை

தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.

ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர் ச்செடியின் தண்டு மற்றும் இலைக் காம்புகள் முட்களால் மூடியவை. இலை கள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந் தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற் றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களி மண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ் வாதம் கரையும்.

இதன் வேரையும் இலை யையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணி யில் சலித்து வைக்க வும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும் பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச் சூடு, ஆசன க்கடுப்பு தீரு ம். சூடு பிடித்தால் சிறு நீர்த்தாரை எரியும். இதற்கு இதன் இலை யை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குண மாகும்.
ஆண்மை பெருகும்

பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின் பம் பெருகும். ஆண் மை பெருக இரவு பா லில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமி ச்சை யளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப் புண் ணும் ஆறும்.
ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சு போல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடு க்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசன த்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வை த்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற் றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண் களில் வைத்து கட்டி வைக்க ஆறி வரும்.
வசியம் உண்டாகும்
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலி கை என்பதால் துளசி போல வீட்டில் வைக் கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத வில க் காகும் பெண்கள் இச்செடியின் அரு கில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேக மூத்தி ரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டு கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்

எதிர்வினைகள்:
தரித்திரத்தை தவிர்ப்பதெப்படி?
தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க, கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம், முன்னோர் வாக்கு.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சிறு வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தரித்திரத்தை தவிர்க்க, உங்கள் செல்வம் நிலைக்க, பணம் பெருக, விருத்தியாக வாழ்த்துக்கள்.

எதிர்வினைகள்:
அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்
விநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.



வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


எதிர்வினைகள்:
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம்.
பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட இந்த ஃபேஸ்புக் யுகத்தில் நேரமில்லாவர்களாகவும் இருப்பதுவும் தான்.
முன்வினைப் பயனால் ஒருவர் பெருஞ் செல்வத்தை தற்போது அடைந்திருந்தாலும் அதற்குரிய பலன் முடிவடையும் போது அது குடம் கவிழ் நீர் போல ஓடிவிடும். அவ்வாறு இல்லாமல் வினையற்ற செல்வம் பல்கிப் பெருக, எங்கும் மங்களம் பெருக, லக்ஷ்மி கடாக்ஷம் நம் கிரகத்தில் நிலைக்க என்ன செய்யவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? என்பதை உங்களுக்கு இந்த தீப ஒளித் திருநாளில் விளக்குவதற்கான பதிவே இது.
பெரியோர்கள் கூற பல்வேறு தருணங்களில் கேட்டது, சிறுவயது முதல் படித்தது, என் தாயாரிடம் கேட்டது, படித்தது, என அனைத்தையும் தொகுத்து தந்திருக்கிறேன். பின்பற்றுங்கள். பலன் பெறுங்கள். லக்ஷ்மி கடாக்ஷம் உங்கள் கிரகங்களில் நிலைக்க திருவருள் துணை புரியட்டும்.
கீழே நாம் கூறிய முறைகள் அனைத்தும் நீங்கள் முயன்றால் சுலபமாக கடைபிடிக்க கூடியவைகளே. அரைகுறையாக இவற்றை கடைப்பிடித்து வந்த நான் தற்போது கூடுமானவரை முழுமையாக கடைபிடிக்க துவங்கியிருக்கிறேன். விரைவில் சுபம் பெருகும்!
திருமகள் எவரிடத்தில் நிலைப்பதில்லை?
திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. “இது ஏன்?’ என அந்த பரந்தாமனே ஒரு முறை அன்னையிடம் கேட்க, அதற்கு அவள், “தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.”
“அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது” என்றாள்.
இதை கேட்டு மகிழ்ந்த பரம்பொருள், “இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன்” என்றானாம்.
சாராய அதிபரின் வாழ்க்கை
மற்றவர்களை துன்புறுத்தியும் தவறான வழிகளிலும் ஈட்டப்படும் செல்வம் அவனை அழவைத்தவாறே அவனை விட்டுச் சென்றுவிடும். உதாரணத்திற்கு சாராய சக்கரவர்த்தி எனப்படும் தொழிலதிபர்  ஒருவரின் சமீபத்திய நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அவரின் தற்போதைய நிலை என்ன? மதுவின் மூலம் கிடைத்த வருமானம் என்ன செய்தது பார்த்தீர்களா? வேறொன்றில் நஷ்டம் ஏற்பட்டு கடைசியில் அனைத்தையும் விற்கவேண்டிய துர்ப்பாக்கியம். எத்தனை செல்வம் இருந்தும் என்ன? அவரால் நிம்மதியாக உறங்க முடியுமா?
இதைத் தான் வள்ளுவரும் கூறுகிறார்…..
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (குறள் 659)
பொருள் : பிறர் அழுமாறு துன்புறுத்திப் பெற்ற பொருட்கள் எல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டுப் போய்விடும். நல்வழியில் ஈட்டிய செல்வம் பறிபோனாலும் அது திரும்ப கிடைத்துவிடும்.
மேற்படி மதுபான அதிபரின் தொழிலால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தனவோ? எத்தனை பத்தினிகளின் வயிறு பற்றி எரிந்தனவோ?
இன்றைக்கும் இந்த முன்னேறிய காலகட்டத்திலும் மின்சாரமின்றி நம் மாநில மக்கள் தவிக்கவும் தொழில்கள் நசிந்து போகவும் காரணம், மதுவினால் கிடைக்கும் வருவாய் தான். குறுகிய ஆதாயத்தை மனதில் கொண்டு அரசாங்கமே மதுவை டாஸ்மாக் என்ற பெயரில் விற்பது என்றைக்கு முடிவுக்கு வருகிறதோ அப்போதே இது போன்ற துர்பாக்கியங்களும் முடிவுக்கு வரும்.
அதே போல, வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் செய்யாது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவனது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும். இதைத் தான் ஒளவை, “ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்” என்று கூறியிருக்கிறார்.
ஆக  அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறிய பங்காவது தான தர்மங்கள் செய்து வரவேண்டும். அப்போது தான் இருக்கும் செல்வம் விருத்தியடையும். எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது.
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக கீழ்கண்டவைகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடைமுறைப்படுத்துங்கள். சுபமஸ்து!
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
(நம் தள வாசகர்களுக்கு நெல்லி மரம் வீடு தேடி வர இருக்கிறது. விபரம் விரைவில்….!)
3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
11) விளக்கை  தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
16)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
27)  இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
48) தங்கம் எனப்படும்  சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ இந்த தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்.


எதிர்வினைகள்:
லிங்க வகைகள்/ சிவராத்திரி

புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும்
பச்சரிசி லிங்கம் - திரவிய தரும்
அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும்
கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும்
வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும்
விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும்
சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும்
புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும்
சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும்
மாவு லிங்கம் - உடல் வலிமை தரும்
பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும்
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
களிமண் லிங்கம்- மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம் 

நான்கு ஜாம வழிபாட்டுக்குரிய திரவியங்கள்

முதல் ஜாமம்:
அபிஷேகம்-பஞ்ச கவ்வியம்
அலங்காரம்-வில்வம்
அர்ச்சனை -தாமரை
நிவேதனம் -பாற்சாதம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம். சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்
புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை
ஒளி - புஷ்பதீபம்
இரண்டாம் ஜாமம்:
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரை பொங்கல்
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம், கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி - நட்சத்திர தீபம்
மூன்றாம் ஜாமம்:
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள் அன்னம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
புகை - மேகம், கருங்குங்கிலியம்
ஒளி - ஐந்துமுக தீபம்
நான்காம் ஜாமம்:
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை -நந்தியாவட்டை
நிவேதனம் -வெண்சாதம்
பட்டு - நீலப்பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம், போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தனம்
புகை - கற்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று தீபம் 

நான்கு ஜாமம் விவரம்

சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை
சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி வரை சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.
அன்ன ஆகாரம் இன்றி பால், பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.
சிவராத்திரி தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்ப மயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும். சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகுவிரைவில் முடியும்


சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1.சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2.மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3.ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5.நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6.சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7.எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8.சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9.அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10.விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.  
1.சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.
2.சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.
3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.
6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.
7.கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.
8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
9. கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
12.சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.
13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.
14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.
15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.
16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.
17.அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.
18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.
19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.
20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.
21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.
22. தேங்காய் எண்ணெய் வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணெய் சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும். 23. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.
24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.
25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.
26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பார்கள்.
27. உமாதேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.
28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும்.
29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.
30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.
31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.
32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.
33. சிவனுக்கு ஆடை தோல்.
34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.
35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.
36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.
37. தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.
39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.
40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.
41. மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் உள்ளது. சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
42. சிவராத்திரியன்று திருவிடைமருதூரில் ஈசனை வழிபட்டால் ருத்ரபாதம் கிடைக்கும்.
43. சிவராத்திரியன்று கோவிலில் சென்று வழிபட்டால் சொர்க்கலோகம் கிடைக்கும்.
44. ஒருவர் தொடர்ந்து 24 ஆண்டுகள் மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால், அவரது 21 தலைமுறையினர் நற்பலன்களைப் பெறுவார்கள். 45. திருவைகாவூரில் சிவராத்திரியன்று ஈசன் திருவீதியுலாவை கண்டு தரிசித்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் விலகும்.
46. மகா சிவராத்திரி செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை வந்தால், அன்று சிவபூஜை செய்து தானம் செய்தால் 3 கோடி மடங்கு புண்ணியம் தரும்.
47. சிவராத்திரியன்று ருத்ராட்சம், சிவலிங்கம், விபூதிப்பை தானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
48. மகா சிவராத்திரி : பாற்கடலில் தோன்றிய நஞ்சைச் சிவபெருமான் உண்டு கண்டம் கருத்தனால் நீலக்கண்டன் என்ற திருநாமம் பெற்றார். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணம் சொல்லுகிறது.
49. பார்வதி சிவபெருமான் கண்களை மூட உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் வேண்ட நெற்றிக் கண்ணைத் திறந்தார். இந்நாள் சிவராத்திரி ஆகும். இதனை அப்பர் கூறியுள்ளார்.
50. மோட்சம் அடைய நான்கு வழிகள்:-
1. சிவனை அர்ச்சிப்பது.
2. ஸ்ரீருத்ரம் பாடலைப் பாராயணம் செய்வது
3. அஷ்டமி திதி திங்களில் விரமத் இருப்பது.
4. காசியில் மரணம் அடைவது. இந்த நான்கு வழிகளிலும் நடக்க சிவராத்திரியில் சிவபூசை செய்ய வேண்டும். 


சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1.சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2.மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3.ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5.நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6.சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7.எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8.சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9.அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10.விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.  


சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.


1. நித்திய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
2. பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.
3. மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
4. யோக சிவராத்திரி:
சோமவார நாளன்று (திங்கட் கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
5. மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி.
இந்த சதுர்த்தசி கிருஷ்ண பட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பௌர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகாசிவராத்திரி.
5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும். மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. 

எதிர்வினைகள்:
செல்வ வளம் பெருக நாம் பின்பற்றவேண்டியவை


செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.


செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.


ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான  அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.


பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.


குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.


எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
ஒரு போதும் வீட்டில் பெண்கள் அழக்கூடாது.அவர்கள் அழுதால்,வீட்டில் செல்வ வளம் தங்காது.


கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாட இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.


மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை!
தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.


எதிர்வினைகள்:
அதி ஜாக்கிரதை தேவை. குண்டலிநீ யோகம்:


குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை

பெரியவாளும் குண்டலிநியும்

இன்னொரு விஷயம், அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’ பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’ பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். 

ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – ”யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்!

இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!
பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிற, வனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான்.

ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ‘பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள். 

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.  

அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்!

அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை.

அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள்.

ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது?

ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். ‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது.

என்ன சொல்கிறாரென்றால்,
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **
என்கிறார்.

என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார்.

ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. ‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் ”விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. ‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை.

ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன்.

ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். 

காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. ‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’ முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது.

எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது.

அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் ”ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தை]ச் சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: ‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். 

அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும்.

எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

No comments:

Post a Comment